சென்னை: திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் .

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக  உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து,  தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர், தலைமச் செயலகத்தில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகத்தார் அனைவருக்கும் பொதுநெறி வழங்கிய தமிழ்ப் பேரறிவின் அடையாளம் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்! குறள் வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் பேணுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.