சென்னை:
4 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தொகுதிகளில் போட்டியிட திமுக ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் திமுக திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட பலர் இருந்தனர்.
முன்னதாக தி.மு.க வேட்பாளர் சரவணன் தி.மு.க நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.