சென்னை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளதா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழம சென்னை நந்தனத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையொட்டி, கட்சி நலன்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
”திருமாவளவன் கட்டுப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை. விசிக யார் கையில் உள்ளது? திருமாவளவன் கையில் உள்ளதா? அல்லது துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கையில் உள்ளதா?. திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா எப்படி சென்றார்?. விசிகவிற்கு ஒரு தலைமையா? அல்லது இரண்டு தலைமயா?’
என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,
”பாஜக அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா?; மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பதை அண்ணாமலை சொல்லட்டும். அதற்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி யார் கையில் உள்ளது என்பதற்கு நான் பதில் சொல்கிறேன்’
எனக் கூறி உள்ளார்.