திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புனித தீர்த்தங்கள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புனித தீர்த்தங்கள் பற்றிய நெட்டிசன் முகநூல் பதிவு
காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளுமே இங்குப் புனித தீர்க்கங்களாய் அமைந்துள்ளன
நாழிக்கிணறு முருகப்பெருமான் சூரசம்காரம் முடித்த பின் வேலாயுதத்தில் உருவாக்கிய நாழிக்கிணற்றில் கங்கை நீர் போல் பெருகியது இதில் நீராடினால் தீவினைகள் தீரும் வறுமை வியாதி பாவங்கள் நீங்கி ஞானம் ஏற்படும்
கீழ்க்கண்ட புனித தீர்த்தங்கள் வள்ளி குகை முதல் மூவர் சமாதி வரை வங்கக் கடலில் உள் அமைந்துள்ளது.
இதில் 21 தீர்த்தங்கள் கடலின் உள்ளேயே அமைந்துள்ளது கடலில் நீராடும்போது 21 தீர்த்தங்களில் நீராடிய பலனையடைகின்றோம்
1. வதனாரம்பதீர்த்தம்:- கலிங்க ராஜன் மகள் கனகசுந்தரி சாபத்தின் பயனாக உக்கிரம பாண்டியன் மகளாகக் குதிரை முகத்துடன் பிறந்து வதனாரம்பதீர்த்தில் நீராடி குதிரைமுகம் நீங்கப்பெற்றாள்.
2. தெய்வானை தீர்த்தம்:- இதில் நீராடினால் கங்கை, யமுனை, கைளரி முதலிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும் பரஞானம் பெறுவர்.
3. சித்தர் தீர்த்தம்:- இதில் நீராடினால் வைகை, தேவகி, கண்ண வேணி முதலிய நதிகளில் நீராடியபயன்கிட்டும் அட்டமாசித்திகள் கிட்டும்,
4. அட்டதிக்குபாலகர்தீர்த்தம்:- இதில் நீராடினால் பம்பை, சரயு, கம்பை முதலிய நதிகளில் நீராடியபயன்கிட்டும்.
5. காயத்திரி தீர்த்தம்:- இதில் நீராடினால் நர்மதை நதியில் நீராடியபயன்கிட்டும், 21600 காயத்திரி மந்திரம் செய்தபலன்கிட்டும்
6. சாவித்திரி தீர்த்தம்:- இதில் நீராடினால் கோதாவரி, பெண்ணை முதலிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும், எமனை வெல்லும் சக்தி கிட்டும்.
7. சரசுவதி தீர்த்தம்:- இதில் நீராடினால் மந்தாகினி, வேதவதி ஆகிய நதிகளில் நீராடிய பயன் கிட்டும், சகலகலைகலையும் தரும் தன்மையுள்ளது.
8. ஐராவத தீர்த்தம்:- இதில் சந்திரபாகை, சிந்து, வாகுகை இவற்றில் நீராடினால் இந்திரலோக பதவி தரும் தன்மையுள்ளது.
9. பைரவ தீர்த்தம்:- சரபோஜி, சோனை, தாமிரபரணி, கம்பை நதிகளில் நீராடிய பயன் கிட்டும், பூத பிசாசு, துர்தேவதைகள் துன்பம் நீக்கும்.
10. வள்ளிநாயகி தீர்த்தம்:- உமாதேவியின் கண்களின் பெயரமைந்த விசாலாட்சி, காமாட்சி, மீனாட்சி, காசி, காஞ்சி மதுரை போன்ற தலங்களில் நீராடிய பலனாகிய புண்ணியமும், ஞானமும் கிட்டும்.
11. துர்க்காதேவி தீர்த்தம்:- முன் ஜென்ம பாபங்கள் நீங்கும்,  இம்மையில் துன்பம் நீங்கும், பேரின்ப வீடும் ஆனந்த வாழ்வும் கிடைக்கும்.
12. ஞானதீர்த்தம்:- முருகப்பெருமானின் தோத்திர பயனும், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதுடன் சகல ஞானபேறும் உண்டாகும்.
13. சத்திய தீர்த்தம்:- துன்பங்கள் நீங்கும் வேத சாஸ்திர ஞானம் கிட்டும், முருகப்பெருமானின் திருவடி தாமரை பேரின்ப வீடு கிடைக்கும்.
14. தர்ம தீர்த்தம்:- இதில் நீராடினால் ஆணவம், கன்மம், மாயை நீங்கி தர்மசிந்தனை ஏற்படும்.
15. முனி தீர்த்தம்:- இருவினை தொடர் நீங்கும் முனிவர்கள் ஆசியினால் சாபங்கள் தீரும், முருகனின் திருவருள் ஞானபேறு கிட்டும்.
16. தேவர் தீர்த்தம்:- காம, குரோத, பகைகள் ஆறும் நீங்கும் தேவர்கள் வந்து வணங்கும் பேறு பெறுவர்.
17. பாவநாச தீர்த்தம்:- முனிவர்களால் ஏற்பட்ட சாபம் தீரும், புனிதப்பிறவி கிடைக்கும்.
18. சேது தீர்த்தம்:- ராமேஸ்வரம் சேதுவில் நீராடிய பயன் கிடைக்கும், முருகனின் திருவருள் கிடைக்கும்.
19. தசகங்கைதீர்த்தம்:- புனிதமான பத்து தீர்த்தங்களில் நீராடிய பயன் கிடைக்கும், பிறவி பிணி தீரும், முக்திபேறுகிட்டும்.
20. லட்சுமி தீர்த்தம்:- குமரி, வேதநதி, துஙகபத்ரா ஆகிய நதிகளில் நீராடிய பயன் நன்மைகளைத் தரும்.
21. கந்தமாதன தீர்த்தம்:- முருகப்பெருமானின் திருவடி தாமரை இந்திரஞால வித்தை போன்றவை கிட்டும்.
22. மாதுரு தீர்த்தம்:- தன் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் தானம் செய்த எல்லா நன்மையும் கிட்டும்.
23. தென்புலத்தார் தீர்த்தம்:- இம்மை மறுமை பேற்றுடன் முன்னோர்கள் ஆசி கிட்டும்.
24.வேல் தீர்த்தமாகிய நாழிக்கிணற்றில் (கந்தபுஷ்கரனி) நீராடிய பிறகே மகாதீர்தமாகிய கடல் நீராடுதல் வேண்டும் என்று தல புராணம் கூறுகிறது – காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள புனித தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும், இதனால் அனைத்து பாவங்களும் நீங்கும், நன்மை பெருகி சகல யோகமிக்க பெருவாழ்வு வீடுபேறு கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது.
2முதல் 24வரையிலான தீர்த்தங்கள் வள்ளி குகைமுதல் சூரசம்ஹார மேடைவரை அமைந்துள்ளது
சரவணப்பொய்கை:- இது கோவில் தெருவில் அமைந்துள்ளது இதில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக முருகன் அவதார காட்சி காண்பதற்கரியது இதில் நீராடினால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியப்பேறு அடைவீர்.
திருச்செந்தில் ஆண்டவா போற்றி…!
நன்றி : நெட்டிசன் ஈசன் எழில் விழியன்