திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உபி மாநிலம் லக்னோவில் உள்ள காசிபூர் பகுதி இந்திரா நகர் 20 வது செக்டரில் பூட்டி இருந்த ஒரு வீட்டிற்குள் சனிக்கிழமை இரவு புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களை வாரிச் சுருட்டி மூட்டையாக கட்டினான்.

பின்னர் அங்கிருந்த ஏசியை போட்டு ஏசி காற்றில் சுகமாக தூங்கியுள்ளான்.

விடிந்தது கூட தெரியாமல் திருடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஆளில்லாத பக்கத்து வீட்டு கதவு திறந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.

பின்னல் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதும் மூட்டையுடன் சந்தேகப்படும்படியாக ஒருவன் உள்ளே தூங்குவதையும் பார்த்து காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர்.

போலீசார் வந்தது கூட தெரியாமல் தூங்கி கொண்டிருந்த திருடனை அவர்கள் தட்டி எழுப்பி விசாரித்ததில் அவன் பெயர் கபில் என்றும் திருட வந்த இடத்தில் குடிபோதயில ஏசி போட்டு தூங்கியதும் தெரியவந்தது.

திருடன் நுழைந்த வீட்டின் உரிமையாளர் டாக்டர் சுனில் பான்டே தனது குடும்பத்துடன் வாரனாசியில் வசிப்பதாகவும் இந்த வீட்டில் வசித்து வந்த சுனில் பான்டேவின் தந்தை கடந்த ஆண்டு இறந்ததை அடுத்து இந்த வீடு ஓராண்டாக பூட்டியிருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு தூங்கிய திருடன் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.