மோடிக்கும் – டிரம்பிற்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜெய்சங்கர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில நாட்களில் சந்தித்த முக்கிய உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என்றார்.
உலகின் மற்ற இந்த தலைவர்களுடனும் டிரம்பிற்கு நேர்மறையான வரலாறு இல்லை, ஆனால் பிரதமர் மோடியின் விஷயத்தில் அப்படியில்லை என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒருவருக்கு ஒருவர் மதிக்கிறார்கள் என்பதை சில அனுபவங்களைக் கொண்டு நியாயமாகச் சொல்கிறேன் என்று அவர் அப்போது தெரிவித்தார்.
USAID குறித்து, டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் சில தகவல்களை முன்வைத்துள்ளதாக கூடிய வெளியுறவு அமைச்சர் இது கவலையளிக்கிறது என்று கூறினார்.
நாங்கள் இதை விசாரித்து வருகிறோம். உண்மைகள் வெளிவரும் என்று நான் நம்புகிறேன்.
USAID நல்லெண்ணத்துடன், நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இப்போது அமெரிக்காவிலிருந்து சில தீங்கிழைக்கும் நடவடிக்கைகள் இருப்பதாகக் கருத்துக்கள் வெளியாகின்றன.
இது கவலையளிக்கிறது, இதில் ஏதாவது இருந்தால், அதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை தெளிவுபடுத்துவோம் என்று கூறினார்.