துபாயில் இருந்து மும்பை வரை கடலுக்கு அடியில் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து 2018ம் ஆண்டு முதல் பேசப்பட்ட வருகிறது.
இந்த நிலையில் கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஆலோசகர் அப்துல்லா அல் ஷெஹி இந்த புல்லட் ரயில் குறித்த ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இருந்து சுமார் 2000 கி.மீ. தொலைவு கடலுக்கு அடியில் கான்கிரீட் அமைத்து கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடலின் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த புல்லட் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் செல்லும் என்பதால் மும்பையில் இருந்து இரண்டு மணி நேரத்தில் துபாய் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
தற்போது விமானம் மூலம் துபாய் செல்ல நான்கு மணி நேரம் ஆகும் நிலையில் பயண நேரம் வெகுவாகக் குறையும் என்றும் இதனால் இருநாட்டு வர்த்தகம் மேலும் மேம்படும் என்றும் கருதப்படுகிறது.
இருந்தபோதும் இந்த திட்டம் குறித்த ஆய்வுகள் பூர்வாங்க நிலையிலேயே உள்ளதை அடுத்து இந்த திட்டத்திற்கான செலவு உள்ளிட்ட மற்ற விவரங்கள் குறித்து இதுவரை எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.