டெல்லி: கலால் ஊழல் தொடர்பாக டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்தி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா, அவர்களின் (மத்திய பாஜக அரசு) பிரச்சினை மது/எக்சைஸ் ஊழல் அல்ல….அரவிந்த் கெஜ்ரிவால்…என காட்டமாக விமர்சித்து உள்ளார்.

நடைபெற உள்ள குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி களமிறங்குகிகறது. அங்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக தலைமை, ஆம்ஆத்மி கட்சியை முடக்கும் வகையில் பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர்மீது சிபிஐ கலால் உழல் தொடர்பக வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ தேடுதல் வாரண்ட்களை பிறப்பித்தது. ஆகஸ்ட் 17 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறப்பு சிபிஐ நீதிபதி எம்.கே.நாக்பால் தேடுதல் வாரண்ட்களை பிறப்பித்தார். சிபிஐ சமர்ப்பித்த தேடல் பட்டியலில் சில ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மணிஷ் சிசோடியா உள்பட பல இடங்களில் அதிரடி ரெய்டு நடைபெற்றது.
இந்த நிலையில், மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மணிஷ் சிசோடியா ரெய்டு குறித்து மத்திய பாஜக அரசை கடுமையாக தாக்கி பேட்டி அளித்தார். அவர்களின் (பாஜக அரசு) பிரச்சினை மது/எக்சைஸ் ஊழல் அல்ல. பிரச்சனை அரவிந்த் கெஜ்ரிவால் என்று கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தடுக்கவே, மத்திய பாஜக அரசு, எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ஏவி உள்ளது என்றும், எனது வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனைகளும்.. அதன் எதிரொலியே என்று சுட்டிக்காட்டியவர், நான் எந்த ஊழலும் செய்யவில்லை. நான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி அமைச்சர் அத்துடன் டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் என்று கூறினார்.
எக்சைஸ் பாலிசியின் (கலால் கொள்கை) காரணமாக முழு சர்ச்சையை உருவாக்குவது நாட்டின் சிறந்த கொள்கையாகும். நாங்கள் அதை வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையுடன் பயன்படுத்துகிறோம். இந்த விஷயத்தில் மாநில துணைநிலை ஆளுநர் (எல்ஜி) தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால், டில்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10,000 கோடி ரூபாய் பெற்றிருக்கும் என்று கூறினார்.
மேலும், டெல்லியில் கல்வி எப்படி உள்ளது என்பதை அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு கவுரப்படுத்தி உள்ளது. டில்லியின் கல்வி மாதிரியை வெளியிட்டது. இது இந்தியாவுக்கே பெருமை. ஆனால், தற்போது சிபிஐ ரெய்டு நடத்தி இருப்பது வெட்கக்கேடானது என்று கடுமையாக சாடினார்.
நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு நேற்று வந்தனர். கல்வி அமைச்சின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். எல்லா அதிகாரிகளும், பெரிய மனிதர்கள். மிக அருமையாக நடந்து கொண்டார்கள். உயரதிகாரிகளின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது, ஆனால் மிகவும் நேர்த்தியாக நடந்துகொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு கூறினார்.