டில்லி:

பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது திருப்பு புகார் கூறப்பட்டுள்ளது.

அர்னாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் சேனலில் இருந்து பிரிந்து சமீபத்தில் ரிபப்ளிக் டிவியை ஆரம்பித்தார்.

தற்போது இவர் மீது டைம்ஸ் நவ் சேனல் திருட்டு புகார் கூறியுள்ளது.. ரிபப்ளிக் டிவி ஆரம்பமான முதல் நாளில், லாலு பிரசாத் யாதவின் ஊழலை வெளிப்படுத்தினர். அப்போது வெளியிடப்பட்ட ஃபோன் உரையாடல், அவர் டைம்ஸ் நவ் சேனலில் பணியாற்றிய போது எடுக்கப்பட்டது என்றும் அதைத் திருடிச் சென்று தனது டிவியில் அர்னாப் பயன்படுத்திக்கொண்டார் என்றும் டைம்ஸ்நவ் குற்றம்சாட்டியுள்ளது.

அதே போல மறைந்த சுனந்தா புஷ்கரிடம் நிருபர் பிரேமா ஸ்ரீதேவி பேசிய ஒலிப்பதிவும் சமீபத்தில் ரிபப்ளிக் டிவியில் ஒளிபரப்பானது. இதுவும் தங்கள் நிறுவனத்தில் பிரேமா ஸ்ரீதேவி  பணியாற்றிய போது எடுக்கப்பட்டது என்றும்  டைம்ஸ்நவ் தெரிவித்துள்ளது.

அர்னாப்பும், பிரேமாவும் செய்தது  பதிப்புரிமை சட்டத்தை மீறிய செயல் என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.