உறவுகள் – கவிதை பகுதி 14
தீட்டு
பா. தேவிமயில் குமார்
எங்கள் வேதனைகளை
எவர் அறிவார்????
இடுப்பெலும்பு
இற்றுப் போகும்!!!
கை கால்கள்
கனமான வலி எடுக்கும்!!!
உடல் முழுவதும் ஒடித்தது போல ஒரு வலி!!!!
அவதி படுகிறோம்
அடிவயிற்றின் வலியால்!!!
போதும் இந்த
பிறவி என
பேச வைக்கும் பெரு வலி!
உடல் மன்றாடும் ஓய்வெடுக்க !!!!
எதுவும் பிடிப்பில்லா
ஒரு நிலையது!!!!
இன்னதென்று சொல்ல
இயலா ஒரு அசதி!!!
ஆனாலும்…….
வெளிக்காட்டாமல் வேலை செய்வோம்!!!!
கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்வோம்!!!
கடவுளும் கடந்து விடுவார், இவள் தீட்டென…….
முடியவில்லை … அந்த
மூன்று நாள் கூட ஓய்வில்லை !!!!!
சாப்பாடு ரெடியா ???? என சத்தமிடும் கணவன்
ஸ்கூலுக்கு நேரமாச்சு!!! சீக்கிரம்மா,,,என பிள்ளைகள்…..
அந்நேரம்
அனிச்சையாய்
ஒடியாடுகிறோம்,!!
அம்மா வலிக்கிறதா?…
அன்பே ஓய்வெடு …..
என்று கேட்பார்களா???
என மனம் ஏங்கும்!!!!
ஆனால் கேட்பார்
எவருமில்லை….
வேலைகளையும்
வலிகளையும்
வலிந்தே ஏற்கிறோம்!
வேறு வழியில்லாமல்!!!
மனிதர்களே …..
அடுத்த முறை
வீட்டில் மட்டுமல்ல!!!!
வங்கியிலோ ,
வணிக வளாகத்திலோ,
வழிப்பாதை கடைகளிலோ
பணி செய்யும் பெண்கள்
பாவம் இந்த
வலிகளோடும்
வேதனைகளோடும்
இருக்கலாம் …..
பார்த்து நடந்துகொள்ளுங்கள்…..
பக்குவப்பட்ட ஒரு சகோதரனாய்!!!!
இப்படிக்கு
உங்களில் ஒரு சகோதரி!!!
பா. தேவிமயில் குமார்