கொரோனா பேரிடர் காலத்தில் ஓடிடியின் வளர்ச்சி, திரையரங்குகளை ஓரம்கட்டியது. திரையரங்கில் நல்ல வசூலை பெறும் சாத்தியமுள்ள படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
திரையரங்கில் வெளியான அதே நாளில் ஓடிடியில் படங்கள் வெளியாவதால் எதிர்பார்த்த வசூல் இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் டிஸ்னி நிறுவத்தை குற்றம்சாட்டியுள்ளனர்.
வார்னர் பிரதர்ஸ் தங்களின் Godzilla vs. Kong, Mortal Kombat படங்களை திரையரங்குடன் சேர்த்து, HBO Max தளத்திலும் வெளியிட்டது.
இந்நிலையில் டிஸ்னி தனது புதிய படமான Black Widow வை ஜுலை 9 திரையரங்கிலும், டிஸ்னி ஓடிடி தளத்திலும் வெளியிட்டது. இதற்கு அமெரிக்காவின் National Association of Theatre Owners (NATO) கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
டிஸ்னி மட்டுமின்றி வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல் பிக்சர்ஸ் போன்ற ஹாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் இனிவரும் காலங்களில் திரையரங்கு, ஓடிடி இரண்டிலும் ஒரேநேரத்தில் படத்தை வெளியிடவே விரும்புகின்றன.
பிளாக் விடோ திரைப்படத்தை இந்தியாவில் டிஸ்னி நிறுவனம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியிடுகிறது. திரையரங்கு வெளியீடு இல்லை.