
கொழும்பு,
உலகிலேயே மிகவும் நீளமான மணல் புத்தர் சிலை கொழும்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நீளமான நிலையை இந்திய மணல்சிற்ப கலைஞர் சுதர்சன பட்நாயக் உருவாக்கி உள்ளார்.
கொழும்பில் 14ஆவது சர்வதேச வெசாக் விழா நாளை தொடங்குகிறது. இந்த விழாவில் உலக நாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொழும்பில் திரண்டுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடியில் விழாவில் பங்குகொள்ள ஸ்ரீலங்கா சென்றுள்ளார்.
உலக பிரச்சித்த புத்த வெசாக் விழாவை முன்னிட்டு மணலால் ஆன சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 வது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள இந்தியர்களின் அழைப்பின் பேரில் சுதர்சன பட்நாயக் இலங்கை சென்றிருந்தார்.
அங்கு, இலங்கை பாராளுமன்ற கட்டடம் அருகே உலகின் மிக நீண்ட 40 அடி நீளம் கொண்ட மணல் புத்ததரை வடிவமைத்துள்ளார்.
வடிவமைக்கப்பட்ட மணல் புத்தரின் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
[youtube-feed feed=1]