உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்லான்டர், மொத்தம் நான்கு என்ஜின்கள் கொண்டது. , 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 845 அடி உயரமும் கொண்டது. அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் கடந்த 19ஆம் தேதியன்று வெற்றிகரமாக நடந்தேறியது.
இந்த நிலையில் நேற்று பிரிட்டனின் பெட்போர்ட்ஷையர் கவுண்டி என்ற தளத்தில் இருந்து மீண்டும் இரண்டாவது சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது வானில் உயரே புறப்பட வேண்டிய நிலையில், விமானத்தின் முன்பாகம் திடீரென தரையில் மோதி விழுந்து விபத்து ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் நல்வாய்ப்பாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.