வாஷிங்டன்: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இதன் காரணமாக,  அமெரிக்க அதிபரின்  வெள்ளை மாளிகையை  கைப்பற்றப்போவது யார்….?  என்பது தெரிய வரும்.

அதிபர் போட்டிக்கான களத்தில்,  ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதியான இந்தியத் தமிழக வம்சாவளியினரான கமலா ஹாரிஸ்   உள்ளார். அவரை எதிர்த்து, குடியரசு கட்சியின் வேட்பாளராக  முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீண்டும் களமிறங்கி உள்ளார். இவர்களுடன்  கிரீன் கட்சியின் ஜில் ஸ்டெய்ன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இருந்தாலும்  கமலாவுக்கும் டிரம்புக்கும் இடையேதான் கடுமையான  போட்டி நிலவி வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் தங்களது ஜனநாயக கடமைகளை செய்து வருகின்றனர்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது,  அமெரிக்காவின்  பொருளாதாரம் மிக முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுது. பைன் ஆட்சியில் அமெரிக்க பொருளாதாரம் வீர்ச்சி அடைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. மேலும், டொனால்ட் டிரம்ப் தொழிலதிபர்களுக்கு ஆதரவான தரப்பைக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ரம்ப் முந்தைய ஆட்சியில் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறும் செயல்முறைகளை கடுமையாக்கினார். குறிப்பாக மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணி அக்காலத்தில் நடந்தது. ஆனால் கமலா ஹாரிஸ் இந்த விவகாரத்தில் சமநிலை நிலைப்பாட்டை முன்வைத்து வருகிறார். ஆவணங்கள் இல்லாத குடியேற்றத்தை எதிர்ப்பதோடு சட்டவிரோத குடியேற்ற முறைகள் குறைவாக இருக்க வழிமுறைகள் கொண்டுவருவேன் என்று அவர் கூறியுள்ளார்.

அதே வேளையில்,  கமலா ஹாரிஸ் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஆதரவான திட்டங்களை முன்வைத்து, அனைவருக்கும் சமமான வளர்ச்சி , முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கு சலுகைகள், சிறு தொழிலதிபர்களுக்கு உதவிகள்  என பல்வேறு வாக்குறுதிகளை  அளித்துள்ளார்.

அதுபோல கருக்கலைப்பு தொடர்பாக இரு போட்டியாளர்களும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இதற்க ஆதரவும், எதிர்ப்பும் மக்களிடையே உள்ளது.  கமலா ஹாரிஸ் கருக்கலைப்பை பெண்களின் உரிமையாக நிலைநாட்டும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்து வருகிறார்.

அதுபோல வெளிநாட்டு கொள்கையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைள், போர் நடைபெற்று வரும் நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவுகள் குறித்தும் இருவரும் விமர்சித்து வந்தனர். இதுவும் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக  அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில்  ஒவ்வொரு முறையும் மாற்றங்கள் நிகழும். ஒருமுறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. ஆனால், இந்த முறை துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ்-க்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால், மீண்டும் அவரது கட்சியே ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. பல்வேறு கருத்துகணிப்புகளும் அதை உறுதி செய்துள்ளன. ஆனால்,  தேர்தலுக்கு முதல் நாள் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இருவருக்கும் இடையே ஒரு சதவிகித வாக்குகளே வித்தியாசம் இருக்கும்,   கமலா ஹாரிஸ் (ஜனநாயகக் கட்சி) ஒரு சதவீத வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் வாக்குப்பதிவு முறை நமது நாட்டை போன்றது கிடையாது. அங்கு நடைபெறும் வாக்குப்பதிவானது வித்தியாசமானது. அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள்,  மக்கள் நேரடியாக வாக்களிக்கும் முறையை மட்டுமின்றி, “Electoral College” என்ற பிரதிநிதிகள் குழுவின் ஆதரவைப் பெற வேண்டும்.

இத்தகைய நிர்ணய முறையில் மொத்தம் 538 பிரதிநிதிகளில் 270 வாக்குகளைப் பெறுவதுதான் வெற்றி அடைவதற்கான அடிப்படை.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனிப்பட்ட வாக்குகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆதரவு ஒரு மாகாணத்தில் அதிகமாகக் கிடைத்தாலே அந்த மாகாணத்தின் முழு வாக்குகளையும் அந்த வேட்பாளர் பெறுகிறார். இதுவே நேரடித் தேர்வுக் கணக்கில் ஒரு பின்தங்கிய முறையாகவும் வேட்பாளர்களுக்கு எதிர்மறையான நிலைமையாகவும் விளங்குகிறது.