லண்டன்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவில் தீவிரமாகி வரும் நிலையிலும், இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் தொடருக்காக மேற்கு இந்திய வீரர்கள் இன்று லண்டனம் வந்தடைந்தனர்.
கொரோனா ஊரடங்கால் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் ஒத்தி வைக்கப்படும், ரத்து செய்யப்பட்டு இருந்தன. தற்போது சில நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதால், முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று (ஜூன் 9ஆம் தேதி) இங்கிலாந்து வந்தடைந்தது. அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் சமூக இடை வெளியை உறுதி செய்வது, சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதி செய்வது போன்றவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர் என இங்கிலாந்து கிரிக்கெட் கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.