ரஷ்யாவைத் தாக்காமல் உக்ரைன் போரை வெல்வது “சாத்தியமற்றது” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ஒரு வாரமாக நிறுத்தி வைத்திருந்த தாக்குதலை மீண்டும் தொடங்கிய ரஷ்யா நேற்று ஒரே நாளில் 570 டிரோன் மற்றும் 40 ஏவுகணைகளை வீசியது.

இந்த தாக்குதலில் உக்ரைனில் உள்ள அமெரிக்க தொழிற்சாலை சேதமடைந்தது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியலில், “ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் மட்டுமே இந்தப் போரில் வெற்றிபெற முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “முன்னாள் அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அனுமதி வழங்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
“ஒரு படையெடுப்பை முறியடிக்க தாக்குதல் நடத்தலாம் வெல்வது கடினம், சாத்தியமற்றது” என்று கூறியுள்ளார்.

மேலும், “விளையாட்டில் ஒரு சிறந்த தடுப்பாட்டக்காரர்களைக் கொண்ட அணி முன்னேறி விளையாட அனுமதிக்கப்படவில்லை என்றால் வெற்றிபெற வாய்ப்பில்லை!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய போது, “வோலோடிமைர், நீங்கள் மாஸ்கோவை தாக்க முடியுமா?… செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கையும் தாக்க முடியுமா?” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டதாகக் கூறப்படுகிறது.
“அதற்குத் தேவையான ராணுவ தளவாடங்களை வழங்கினால் முடியும்” என்று ஜெலன்ஸ்கி பதிலளித்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் ரஷ்யா மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அதிபரின் சமூக வலைதள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்… ஒருவர் பலி 15 பேர் படுகாயம்…