டெல்லி: வக்பு திருத்த மசோதா நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும். வக்பு சட்டம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வஃபு வாரிய சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்தியஅரசு வஃபு வாரிய திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறு வது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை யாக இருப்பதால் வஃபு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்களவையில், 12மணி நேர விவாதத்திற்குப் பிறகு ஏப்ரல் 3ந்தேதி அதிகாலை 2மணி அளவில் 288-232 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 3ந்தேதி பிற்பகல் மாநிலங்களைவில் தாக்கல் செய்யப்பட்டது. இங்கு மசோதாவுக்கு மொத்தமாக 128 பேர் ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதனால் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் வஃபு திருத்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த மசோதா நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும். வக்பு சட்டம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் (திருத்த) மசோதா மற்றும் முஸ்லிம் வக்ஃப் (ரத்து) மசோதா, சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நமது கூட்டுத் தேடலில் ஒரு திருப்புமுனை தருணத்தைக் குறிக்கிறது.
இது குறிப்பாக நீண்ட காலமாக இருந்து வருபவர்களுக்கு உதவும். இது நீண்டகாலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும்.
பல தசாப்தங்களாக, வக்ஃப் அமைப்பு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமைக்கு ஒத்ததாக இருந்தது.
இது குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களின் நலன்களுக்கு தீங்கு விளைவித்தது.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.
சட்டகம் மிகவும் நவீனமாகவும் சமூக நீதிக்கு உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும் ஒரு சகாப்தத்தில் நாம் இப்போது நுழைவோம்.
ஒரு பெரிய குறிப்பில், ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதன் மூலம் நாம் ஒரு வலுவான, உள்ளடக்கிய மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குகிறோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.