லண்டன்: இந்தியாவில் கொரோனா அலை இன்னும் சில நாட்களில் வேகமெடுக்கும் என்று லண்டன்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா பரவலும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொற்று பரவலும்  தினசரி பாதிப்பு 10ஆயிரத்தை கடந்து மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.

கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான பரவலை தடுக்க மத்தியஅரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் தொற்று பரவலை  தடுக்க மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில், இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான்   குறித்து,  லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் டிராக்கர் மென்பொருள் மூலமாக ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த  மே மாதத்தில், இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா பரவலின் 2வது அலை குறித்து சரியாக கணித்த இந்த ஆய்வு, தற்போது மீண்டும் கொரோனா அலை தீவிரமாகும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று  தெரிவித்து உள்ளது. 140 கோடி மக்கள் வசிக்கும் நெரிசலான தேசத்தின் வழியாக  ஓமிக்ரான் மாறுபாடு நகர்வதால், தீவிரமான ஆனால் குறுகிய கால வைரஸ் அலைக்கு செல்லலாம் என்று எச்சரித்துள்ளது.

டிசம்பர் 24ந்தேதி வரையிலான கணிப்பில் குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  இந்த மாநிலங்களில் புதிய வழக்குகளின் வளர்ச்சி விகிதம் 5%க்கும் அதிகமாக உள்ளது. இது டிசம்பர் 26க்குள் 11 இந்திய மாநிலங்களுக்கு விரிவடைந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், இந்தியா அரசு கடந்த வாரம், இது பூஸ்டர் ஷாட்களை அனுமதித்தது மற்றும் தடுப்பூசி திட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய இளைஞர்களையும் சேர்த்தது.  மேலும் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிவைரல் மாத்திரை மோல்னு பிராவிர், உள்ளூர் மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த கொள்கை முடிவுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொடிய டெல்டா தலைமையிலான வைரஸ் அலைக்குப் பிறகு இந்தியா கற்றுக்கொண்ட கடினமான பாடங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும்  தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கூறிய,  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியின் பேராசிரியர் பால் கட்டுமான் டிராக்கர்,  “இந்தியாவில் புதிய நோய்த் தொற்றுகள் சில நாட்களில் அதிகரிக்கத் தொடங்கும், ஒருவேளை இந்த வாரத்திற்குள்,” என்று  தெரிவித்துள்ளார். மேலும், தினசரி வழக்குகள் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதைக் கணிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார்.