சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத்துடன் டிவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த மு.க.ஸ்டாலின், உலகின் முன்னனி நிறுவன உயர் அலுவலர்களை சந்தித்து பேசி ரூ.7,516 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தனது பயணத்தை மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு , சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
முன்னதாக, வு அரசுமுறை பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரஅமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் 29-ம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். செப்.2-ம் தேதி சிகாகோ சென்று, அங்கும் முதலீட்டாளர்களை சந்தித்தார். இரு இடங்களிலும் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடினார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் கடந்த 11-ம் தேதி வரை, 17 நிறுவனங்களுடன் ரூ.7,516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு புறப்பட்டு, இன்று துபாய் வருகிறார். நாளை (செப்.14) காலை சென்னை திரும்புகிறார் சென்னை திரும்பும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் சென்றிருந்த தொழிற்துறை அமைச்சரான டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத்துடன் டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் தள பதிவில், மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக குழு, அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள். அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் ஆயிரக்கணக்கான கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளார். ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். அமெரிக்க பயணம் இன்றுடன் முடிவடைந்தாலும், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இது ஆரம்பம் மட்டுமே! என குறிப்பிட்டுள்ளார்.