அமராவதி: நாட்டில் சனாதன பாதுகாப்பு வாரியம் நேரம் வந்துவிட்டது  என ஆந்திர துணைமுதல்வரும், நடிகருமான  பவன் கல்யாண்  தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது,  திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்து லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுநாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த முறைகேடு  விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். தொடர்ந்து, ஆய்வகத்தின் பரிசோதனை முடிவில், லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி  நாடு முழுவதும் இருந்து பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது தேவஸ்தானத்தின் நிர்வாகிகளாக சில கிறிஸ்தவர்கள் சேர்க்கப்பட்டதுதான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து,  இந்தவிவகாரம் குறித்து பேசிய  மாநில  துணை முதல்வர் பவன் கல்யாண் நாட்டில் சநாதன பாதுகாப்பு வாரியம் நேரம் வந்துவிட்டது  என்றும் திருப்பதி லட்சு தயாரிப்பில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக  துணைமுதல்வர் பவன் கல்யாண்  தனது எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள கண்டனம் பதிவில்,  திருப்பதி பாலாஜி பிரசாத்தில் விலங்குக் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு) கலந்ததை அறிந்து நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது. மேலும், இது கோவிலின் நிலப் பிரச்னைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்திய அளவில் கோவில்களில் உள்ள பிரச்னைகளை ஆராய ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது.

தேசிய அளவில் அனைத்து கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் விவாதம் நடத்த வேண்டும்.

சநாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.