சென்னை,

ட்சியை கவிழ்க்க நினைக்கும் டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழக அரசு சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா. பாண்டியராஜன் உள்பட அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம் ஆளுநரின் ஆய்வு குறித்து  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,  “அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் தமிழக ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்கிறார் என்றார். மேலும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது, தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.

தமிழக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் சதி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது.  ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும்  டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது எனத் தெரிவித்தார்.

மேலுரும்,  தற்போதைய  ஆட்சியில் மக்களுக்கு எந்த குறையும் இல்லை, முதல்வர் தலைமையில் உள்ள அரசு சீராக செயல்பட்டு வருகிறது என்றார்.

பேருந்து கட்ட உயர்வு குறித்த கேள்விக்கு, புதியப்பேருந்துகளை வாங்கவும், போக்குவரத்து துறையை சீர் செய்யவுமே  பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.