புதுடெல்லி:

நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், கடந்த வெள்ளியன்று நியூசிலாந்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர தாக்குல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை. இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை எண்ணி வேதனையடைகின்றேன்.

இந்த தீவிரவாத தாக்குதலை தைரியத்துடன் எதிர்கொண்டவர்களுக்கு என் அன்பும் ஆதரவும் உண்டு. வெறுப்பு எப்போதும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன், தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த தினம், கறுப்பு தினம் என்று குறிப்பிட்டுள்ளார்.