கொழுப்பு:
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வரும் 4-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உச்சத்தை தொட்டுள்ளது. இலங்கை நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார பாதிப்பிற்கு மோசமாக நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டும் அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என போர் கொடி தூக்கியுள்ளனர்.
இதனை வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆளும் அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. ஆனால் பதவி விலக போவதில்லை என்ற முடிவில் திட்டவட்டமாக இருக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்ச அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அறிவித்தார்.
இதனிடையே, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய சபாநாயகரை தேர்வு செய்ய நாளை மறு நாள் இலங்கையில் நாடாளுமன்றம் கூடுகிறது.
மேலும் அன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டங்களுக்கும் மத்தியில் இலங்கையில் நாடாளுமன்றம் கூட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.