சென்னை: 
ரசைப் பாராட்டி எழுதச் சொல்லவில்லை. விமர்சனம் வையுங்கள், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கிண்டியில் நடந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சார்பில் ‘ட்ரில்லியன் டாலர் தமிழ்நாடு’  வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ‘மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வணிக பிரதியை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“கடந்த 2008- ஆம் ஆண்டு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் சென்னை பாதிப்பை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறேன். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடல். அதை நோக்கி தான் எல்லாத் திட்டங்களும் உள்ளன. முதலமைச்சராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன். உலகில் அதிகம் வாசிக்கக்கூடிய நாளிதழாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விளங்குகிறது.
தி.மு.க. ஆட்சியமைத்த கடந்த நான்கு மாதங்களில் தமிழ்நாடு தொழிற்துறையில் புத்துணர்வு அடைந்திருக்கிறது. இந்தியாவிலேயே ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். அனைத்து தொழில்களும் தொடங்குவதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அரசைப் பாராட்டி எழுத வேண்டும் என்று கட்டளை போடவில்லை; விமர்சனங்கள் செய்யுங்கள்; அதனைச் சரி செய்கிறோம். தமிழ்நாடு தொழிற்துறை குறித்த செய்திகள் அதிகம் இடம் பெற வேண்டும் என்று ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்”.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.