டில்லி:

டிஜிபி நியமனங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது. அதன்படி, மாநில அரசு சுயமாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.

டிஜிபி பதவி என்பது, ஒரு மாநிலத்தின் காவல்துறையின் தலைமைப் பதவியாகும். இந்த தலைமை இயக்குநர் பதவியை அடைய ஐபிஎஸ் காவல்துறை அதிகாரிகளிடையே கடுமையான போட்டிகள் ஏற்படுவது உண்டு. பதவியை பிடிப்பதற்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படு வதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக  மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீராக பராமரிப்பதிலும், காவல்துறையை வழிநடத்துவதிலும் சிக்கல்கள் நீடித்து வந்தது. இதுபோன்ற நடைமுறைகளை தவிர்க்க வலியுறுத்தி, காவல்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், பொதுநல வழக்கு ஒன்றில்,  2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பல்வேறு வழி காட்டுதல்களை கூறியிருந்தது.

அதன்படி, ஒஒரு மாநிலத்தில் பணியாற்றும், மூத்த ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை, மாநில அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

அந்த பட்டியலை பரிசீலிக்கும் தேர்வாணையம், முதல் ஐந்து அதிகாரிகளில் மூவரின் பெயர்களை தேர்ந்தெடுத்து மாநில அரசுக்கு அனுப்பும்.

அப்படி அனுப்பப்படும் மூவரின் பெயர்களில் இருந்து மாநில அரசு ஒருவரை தேர்ந்தெடுத்து டிஜிபியாக நியமிக்க வேண்டும்.

டிஜிபியாக நியமிக்கப்படும் அதிகாரி, அடுத்த இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்து டிஜிபியாக இருப்பார்.

அவரது பணி ஓய்வு இடையில் வந்தாலும் கூட, அவர் இரண்டாண்டுகளுக்கு டிஜிபியாக தொடர்ந்து இருப்பார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளில் மேலும் சில சீர்த்திருங்களை உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. டிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை மாற்றி அமைத்து உள்ளது உச்சநீதி மன்றம்.

அதன்படி,  டிஜிபி பதவிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது பணியாற்ற வேண்டும்.

6 மாதம் பணிக்காலம் இருந்தாலும் பதவி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக நியமிக்கலாம்

மாநில அரசு சுயமாக டிஜிபி களை நியமிக்க முடியாது

யுபிஎஸ்சி மட்டுமே டிஜிபி களை நியமிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் என்று தெரிவித்து உள்ளது.