பீஜிங்:

கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் அதிகரித்து வரும் நிலையில், மக்களை வீடுகளுக்குள் வைத்து கதவை வெல்டிங் செய்யும் கொடுமை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளையே மிரட்டி வருகிறது.  உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதே வேளையில் சீனாவில் கொரோ வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை 1016 பேர் பலியான நிலையில், பிலிப்பைன்சில் ஒருவரும், ஹாங்காங்கில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.  மொத்தம் 1018 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலையில், அவர்கள் குடியிருந்து வரும் வீட்டின் கதவுகள் வெளிப்பக்கம்  வெல்டிங் வைக்கப்பட்டு வருகிறது. இது பரபரபப்பை ஏற்படுத்திஉள்ளது.

கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதற்காக, அவர்களை தனிமைப்படுத்தும் நோக்கில், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.