டெல்லி:  மத்தியஅரசு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில்,  இதுவரை 97.87 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்தியஅரசு, கடந்த 2023ம்   ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து,   புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது மேலும்,  குறைந்து 2000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பிவிட்டதாகவும், திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 7,581 கோடி ரூபாய் மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

மே 2023க்குள் 97.76% ரூபாய் 2000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பி வந்துவிட்டன என ஆர்பிஐ, தற்போது ஜுன் 30ந்தேதி வரை 97.87 சதவீதம் நோட்டுக்கள் திரும்பி உள்ளதான தெரிவித்து உள்ளது.

திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி, நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதன் மதிப்பிலான தொகையை, தங்களது வங்கி கணக்கில் வரவு செய்து கொள்ளலாம்; அல்லது, அதற்குரிய மதிப்பிலான பிற நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.