வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்களால் நடைபெற்ற வன்முறை செயலைத் தொடர்ந்து, அங்கு 15 நாட்கள் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாகாண மேயர் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில்  தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப், இந்த நிலையில், தனது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். இது தொடர்பாக வழக்கு போட்டுள்ளார். ஆனால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன்  வரும்   20-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். முன்னதாக இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க நாடாளுமன்ற விதிப்படி அவருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள்  நாடாளுமன்றத்தை முறையிட்டு, நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம் செய்தனர். கலவரத்தை அடக்க காவல்துறையினர்  நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், வாஷிங்டன் டி.சி.யில் பொது அவசரநிலை 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவமாக மாகாண மேயர் முரியல் பவுஸர்  அறிவித்து உள்ளார். தலைநகர் ஏற்பட்டுள்ள கலவரம் வன்முறையைத் தொடர்ந்து, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.