ஜூலை 12ல் தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டம்!

Must read

டில்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 12-ல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற மத்திய பட்ஜெட்  கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து  மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது  குறித்து சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை)  12ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடரை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12ந்தேதி தொடங்கும் இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 11ந்தேதி வரை சுமார் 1 மாத காலம் நடைபெறும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 17ந்தேதி ஜனாதிபதி தேர்தல் வாக்குபதிவு நடைபெற வேண்டியதிருப்பதால்,  எம்பி.,கள் ஓட்டளிக்க வசதியாக  முன்னதாக 12ந்தேதியே பாராளுமன்ற கூட்டத்தை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

More articles

Latest article