டெல்லி: காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர் என தனது தங்கை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் – பாஜகவினர் இடையே வன்முறையில்  வன்முறையில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகினர். லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளார். தன்னை 28 மணி நேரத்திற்கும் மேலாக எந்த உத்தரவும் இன்றி தடுப்புக்காவலில் வைத்திருப்பதாக பிரியங்கா காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

தனது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான  பிரியங்கா காந்தி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து டிவிட் பதிவிட்டுள்ள  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி,

 “காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது” எனப் பதிவிட்டுள்ளார்.

விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை! பிரியங்கா காந்தி