சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம்  என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு வேலைகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு முக்கியமாக கருதப்படுகிறது. அதனால், ஏராளமானோர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு பணிகளுக்காக காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு அரசு,  2014-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொழில் நெறி காட்டும் மையங்களாக மாற்றப்பட்டன. அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  2024ம் ஆண்டுபிப்.29-ஆம் தேதி நிலவரப்படி, அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி,  தமிழ்நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 54,81,564.

இவர்களில் , ஆண்கள் 25,26,487 பேரும், பெண்கள் 29,54,,792 பேரும் உள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 285 பேர்.

மெத்தமுள்ள 54,81,564 பேரில், . 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் 11,495 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 24,12,771 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 17,21,980 பேரும் உள்ளனா்.

மேலும், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 2,39,391 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வை மாணவா்கள் முடித்து தங்களது கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும்போது, இப்போதிருக்கும் எண்ணிக்கை மேலும் உயரும்.