சிங்கப்பூரில் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கோரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்க உலக நாடுகள் முன்னேற்பாடு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. அதுபோல சிங்கப்பூரில் தமிழ் உள்பட 4 மொழிகளிலும் மக்களிடையே விழிப்பு ஏற்படுத்தி வரும் சிங்கப்பூர் மாநில சுகாதாரத்துறை, சிங்கப்பூரில் ஒவ்வொரு இல்லத்துக்கும் 4 இலவச சுவாசக் கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது..
சிங்கப்பூரில் உள்ள சுமார் 1.37 மில்லியன் இல்லங்களுக்கு சுவாசக் கவசங்கள் பிப்ரவரி 1முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்களும் சுத்தப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையில், சீனாவில் சிக்கியுள்ள சிங்கப்பூர்காரர்ளை அழைத்து வர தனி விமானம் சென்றது. இதில், இன்று 92பேர் சீனாவின் வுகான் நகரிலிருந்து திரும்பியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு நோய்க்தொற்று உள்ளது தெரிய வந்ததுள்ளது. ஏற்கனவே 7 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றிய பயணிகளுடன் பயணம் செய்த மற்ற பயணிகள் மற்றும் அதிகாரிகளும் தொடர்ந்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள் என்று சிங்கப்பூர் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும், சீனாவின் ஹூபெய் மாநிலத்திலிருந்து வந்திருப்போர் மட்டுமே கோரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாவதாகவும், சிங்கப்பூரில் யாருக்கும் கோரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.