இந்தியாவின் ரிசர்வ் வங்கி தலைவராக இருந்த ரகுராம்ராஜன் அமெரிக்காவில் பணியாற்ற சென்றுள்ளார். அவரை வரவேற்று இந்த ஆண்டு பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற வல்லுனர் ரிச்சர்ட் எச்.தாலர் டுவிட் செய்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013 செப்டம்பர் முதல் பதவி வகித்து வந்தார். அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கு நாடு முழுவதும் உள்ள பொரளாதார வல்லுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உலகின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களில் ஒருவராக ரகுராம் ராஜனை தக்க வைத்துக்கொள்ள மோடி தலைமையிலான அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினர்.
அதன்பிறகே மோடி, பண மதிப்பிழப்பு கொண்டுவந்து நாட்டி மக்களை பெரும் சங்கத்திற்கு உள்ளாக்கினார்.
ரகுராம்ராஜன், 2005ம் ஆண்டே, 2008ம் ஆண்டு இந்தியா பொருளாதார சந்திப்பை தடுக்கும் என்று கணித்தவர். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தகுதி வாய்ந்த பொருளாதார வல்லுநர்களில் ரகுராம் ராஜன் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ரிச்சர்ட் ஹெச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரிச்சர்ட் ஹெச்.தாலர் கடந்த ஜூன் மாதமே ரகுராம் ராஜன் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரகுராம்ராஜன் பொருளாதாரம் தொடர்பான ஆய்வு பணி மற்றும் பேராசிரியர் பணி தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்று எச்.தாலர் தனது டுவிட்டர் பதவில், ‘இது இந்தியாவிற்கு இழப்பு ஆனால் நமக்கு (அமெரிக்காவுக்கு) ஆதாயம். ரகுராமை நாம் மீண்டும் பெறுவது மிகச்சிறந்த ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த டுவிட் வைரலாக பரவி வருகிறது. ரகுராம்ராஜனை இழந்தது மோடி அரசுக்கு விழுந்த பெரிய அடி என்றும், அதன் காரணமாகவே இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேய நீடித்துள்ளது என்றும் கூறுகினற்னர்.