டில்லி,

ந்தியாவில் மீண்டும ஒரு ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.  இந்த நோட்டுக்கள் டார்க் பிங்க் மற்றும் பச்சை நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 1 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடுவது  கடந்த 1994ம் ஆண்டே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 1 ரூபாய் நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. அதுவே புழக்கத்திலும் உள்ளது. இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து வெளியிடப்படும் என அறிவித்த நிலையில், தற்போது புதிய 1 ரூபாய் நோட்டுக்கள் வெளியாகி புழக்கத்துக்கு வந்துள்ளது.

இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் பழைய வடிவமைப்பையே ஒத்திருக்கிறது. ஆனாலும் அடர் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் உள்ளன.

இந்த ஒரு ரூபாய் நோட்டு பழைய நோட்டு போலவே இருந்தாலும், வண்ணம் மாற்றப்பட்டு இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலும் உள்ளது. மேலும் இந்த நோட்டில், மத்திய நிதித்துறை செயலாளர்  சக்திகாந்த தாசின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.