சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடுஅரசு நிசான் கார் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 2000ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள நிசான் கார் தொழிற்சாலையானது விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரகடம் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், தற்போது தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த உள்ளது .
3300 கோடி ரூபாய் : இதற்கான தமிழக அரசு மற்றும் நிசான் தொழிற்சாலைக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமானது இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியது. ஒரகடத்தில் 600 ஏக்கரில் செயல்பட்டு வரும் நிசான் கார் தயாரிப்பு நிறுவனமானது கூடுதலாக 3300 கோடி ரூபாய் செலவு செய்து ஆலை விரிவு பணிகளில் ஈடுப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்புகள் : இதற்கு அரசு நிலம் மற்றும் மின்சார சலுகைகளை வழங்குகிறது. இந்த கார் தொழிற்சாலை விரிவாக்கத்தை காரணமாக அங்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான முன்னணி கார் நிறுவனங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இதன் மூலம், இங்கு தயாரிக்கும் கார்கள் உலகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள டிவிட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசிற்கும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.