உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை தொடர்ந்து இரு பக்கத்திலும் மீடியாக்கள் போர், போர் என்று அலறிக்கொண்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் டில்லி – லாகூருக்கிடையில் பஸ் சர்வீஸ் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

போர் பீதி உக்கிரத்தில் இருந்த கடந்த வெள்ளியன்று கூட 15 பாகிஸ்தானிய பயணிகள் டில்லியிலிருந்து லாகூருக்கும், 20 பயணிகள் லாகூரில் இருந்து டெல்லிக்கும் பயணம் செய்திருக்கிறார்கள்.
வழக்கம்போல ஜலந்தர் மாவட்டம் கார்ட்டர்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு சேர்ந்து உண்டிருக்கிறார்கள். செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானிய பயணி ஒருவர் இரு பக்கத்திலும் மீடியாக்கள்தான் போரை மூட்டிவிடும் விதத்தில் அலறிக் கொண்டிருக்கிறன.
ஆனால் இருநாட்டு மக்களும் அமைதியையே விரும்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel