சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி 5ஆண்டுகளகாக திருமணம் செய்யாமல் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் குடும்பம் நடத்த வந்த நிலையில், அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கொடுத்த புகாரின் பேரில்  முன்னாள்  முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து, அவரது மதுரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு செசன்ஸ் கோர்ட்டில் தள்ளுபடியானது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து,  முன்னாள்  அமைச்சர் எம்.மணிகண்டனுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும்,  விசாரணை நீதிமன்றத்தின் முன் ரூ .10,000 ஜாமீன் செலுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.