டெல்லி: தமிழர்களின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பீட்டா விலங்குகள் நல அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, பொதுமக்கள் நடத்திய தன்னெழுச்சி போராட்டம் காரணமாக, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கியும், அந்தப் பாரம்பரிய போட்டி குற்றமாகாது என்று தெரிவித்தும் மிருகவதை தடுப்பு திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்கியது. பீட்டா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தத் தடையில்லை எனவும், தமிழக அரசின் திருத்தச் சட்டம் செல்லும் என்றும் கடந்த மே மாதம் தீா்ப்பளித்தது.
இநத் நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்புகள், அந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதில், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தின் கம்பாலா, மாட்டு வண்டி பந்தயங்கள் காளைகள் மற்றும் எருமைகளின் நடத்தை, உடல் அமைப்பு மற்றும் இயல்பான உணா்வுக்கு எதிரானவை. அந்தப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் காளைகள், எருமைகளுக்கு சொல்லமுடியாத வேதனை, வலி மற்றும் கொடுமை ஏற்படுகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, 2017 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களை நேரில் கள ஆய்வு செய்து விரிவான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. எனினும் அந்த ஆவணங்களை கருத்தில் கொள்ள நீதிமன்றத் தீா்ப்பு தவறிவிட்டது.
இந்தப் போட்டிகள் தொடா்பான திருத்தச் சட்டங்களை நியாயப்படுத்தி கடுமையான சட்டப் பிழையை உச்சநீதிமன்றம் செய்துள்ளது. எனவே ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.