அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, மக்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கிய நிலையில், தற்போது நிதிச்சுமையால் தள்ளாடி வருகிறது.
இந்தியாவின் மொத்த கடன் சுமை 2020 நவம்பர் இறுதி நிலவரப்படி ரூ .3,73,140 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆந்திர மாநிலஅரசு ரூ. 3.73 லட்சம் கோடி கடன் சுமையை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. மாநில அரசின் நலத்திட்டங்கள் கருவூலத்தை ஆழ்ந்த கடனில் தள்ளிவிட்டன என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில், சந்திரபாபு நாயுடுவின் அரசுக்கு முடிவு கட்டிவிட்டு, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து, மக்களிடையே மேலும் செல்வாக்கை உயர்த்தி வந்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திரா மாநிலம், கடந்த 2014 ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்ட போது மாநிலத்தின் கடன் சுமை ரூ. 97,000 கோடியாக இருந்தது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் நிதிச்சுமை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு (2019) மார்ச் நிலவரப்படி, கடன் தாகையான ரூ .2,58,928 கோடியாக உயர்ந்தது. ஆனால், பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும், கடன் சுமை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதாவது, கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் முதல் 2020 நவம்பர் வரை, வங்கிகள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து ரூ .1,14,212.81 கோடி கடனாக வாங்கப்பட்டு உள்ளதாகவும், அதில் ரூ .1,06,866.25 கோடி, ஜூன் 2019 முதல் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியால் வாங்கப்பட்டு இருப்பதாகவும். ஆந்திர மாநில அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மாநிலக் கருவூலத்தில் பெரும் கடனை ஏற்படுத்தியுள்ளதாகக் சிஏடிஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் மாநில அரசு ரூ .70,082.90 கோடி வருவாய் செலவிட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.சி.பியின் நலத்திட்டங்களைச் சார்ந்தது என்று தெரிவித்துள்ளடன் வாங்கி வாங்கிய விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை மட்டும் ரூ .73,811.85 கோடி வெவ்வேறு மூலங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் ஆண்டு இலக்கு ரூ .48,295.59 கோடியாகும்.
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும், அரசாங்கம் அதன் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ .13,001 கோடியை கடன் வாங்கியது.
முழு நிதியாண்டிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ .18,434.15 கோடிக்கு எதிராக, வருவாய் பற்றாக்குறை நவம்பர் இறுதிக்குள் ரூ .57,925.47 கோடியாக உயர்ந்துள்ளது.
2020-21 நிதியாண்டில் இதுவரை ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ .9,226.375 கோடியை மாநில அரசு கடன் வாங்கியுள்ளது.
தற்போதைய கடன் வாங்கும் போக்கு, 2021 மார்ச் இறுதிக்குள் மாநில அரசு குறைந்தபட்சம் ரூ .30,000 கோடி கடனை திரட்டக்கூடும் என்பதைக் குறிக்கிறது, இது 2020-21 நிதியாண்டில் மொத்த கடன் 1.04 லட்சம் கோடிக்கு மேல் என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அதிகரித்துள்ள கடன் சுமையால் மாநில அரசு தள்ளாடி வருவதாக கூறப்படுகிறது.