சென்னை: சவுக்கு சங்கர் மீது பெண்கள் துடைப்பம் வீசிய விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு  இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது துடைப்பத்தை வீச பெண்களை திரட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு அரசு, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்மீது குண்டாசும் போட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் நீதிமன்றம் வந்திருந்த சவுக்கு சங்கர்மீது, சில பெண்கள் துடைப்பத்தைக் கொண்டு தாக்கியதுடன், அதை வீசி எறிந்து போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 15ந்தேதி அன்று நடைபெற்றது. திருச்சி நீதிமன்றத்தில், சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டு,   நீதிமன்றத்தை விட்டு காவல்துறையினர் அழைத்து வந்தபோது நீதிமன்ற வாசலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குமாறு மற்றும் செருப்புடன் சவுக்குசங்கர் எதிர்த்து கோஷமிட்டும், அவர்மீது வீசி எறிந்ததும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பல்வேறு செய்திகள், வீடியோக்கள் வெளியாகின. அந்த பெண்கள் கூலிக்கு வரவழைக்கப்பட்டிருந்தும், அவர்கள் எதற்காக துடைப்பம் வீசினர் என்ற விவரும் தெரியாத நிலையும் அம்பலமானது. இதைத்தொடர்ந்து,

அவர்களை போராட்டம் நடத்தவும்,  வுக்கு சங்கர் என்ற சங்கர் மீது துடைப்பத்தை வீச பெண்களை திரட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் சவுக்கு சங்கருக்கு  பெண்கள் போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களைத் தூண்டியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய சென்னை மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திழக்கு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு  இன்று (திங்கள்கிழமை)  தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.