புதுடெல்லி:
கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பல்வேறு கொரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதற்கு கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய அறிவுறுத்தலை வழங்கிய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளத. அதன்படி கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிப்பதற்கு கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளது.

Medical workers in protective suits tend to coronavirus patients at the intensive care unit of a hospital in Wuhan, China.

நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள பிரத்தியேக வார்டுகளில் அனுமதிக்கலாம் எனவும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் மருத்துவ சேவைகள் மறுக்கக் கூடாது எனவும்,வசிப்பிட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வில்லை என்கிற காரணத்திற்காக எந்த ஒரு நோயாளிக்கும் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.