சென்னை:
தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மழை வெள்ளத்தை வெளியேற்றத் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
இந்நிலையில், சென்னை ஓட்டேரி அருகே தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து, ஏழுமலை என்பவர் வலிப்பு ஏற்பட்டு கால்வாயில் விழுந்துள்ளார்,
இதையறிந்த தீயணைப்புத்துறை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட ஏழுமலையைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்