டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அபாரமாகஆடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இது வரலாற்று சாதனையாக புகழப்படுகிறது.
32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் (ஜூலை 23ந்தேத) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த 11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில்,இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணியினர் போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன்மூலம்,ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
இதை, இந்திய மகளிர் அணி கோச் தனது ட்விட்டர் பக்கத்தில், சாரி பேமிலி, தனது இல்லத்திற்கு மீண்டும் தாமதமாக வருகிறேன் என்று நகைப்புடன் பதிவு செய்துள்ளார்.