சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலின் சொத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விற்கப்பட்டு உள்ளது என நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான உள்ள 18.5 ஏக்கர் கோயில் நிலத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விற்றதற்கான ஆவனங்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சிலர் கோவிலுக்குள் சென்று பிரச்சினைகளை எழுப்பி வருவதும், அதை புகாராக பதிவு செய்துகொண்டு காவல்துறையினரை கொண்டு கோவில் நிர்வாகத்தினருக்கு குடைச்சல் கொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது.
ஏற்கனவே சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து. இதை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கோவிலை நிர்வகிக்க பொதுதீட்சிதர்களுக்கே உரிமை, அறநிலையத்துறை வெளியேற உத்தரவிட்டது. ஆனால், அறநிலையத்துறை மீண்டும் கோவிலை கைப்பற்றும் நோக்கில் தீர்ப்பை மதிக்காமல் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்போருது, கோவிலின் மூலம் ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டி வருவதாக கண்க்கு காண்பிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த கால விசாரணைகளின்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு – செலவு கணக்கு தொடர்பான விவரங்கள் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் “கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை வட்டாட்சியர் நிர்வகித்து வருகிறார். அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் ரூ.93 ஆயிரம் மட்டுமே பெறப்படுகிறது. நடராஜர் கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் சுமார் மூன்றாயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் தற்போது ஆயிரம் ஏக்கர் மட்டுமே உள்ளது. எனவே, அதுகுறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
அதேபோல கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வழங்கும் தட்சணைகளை தீட்சிதர்கள் எடுத்துச்சென்ற போதிலும் கோயில் நிர்வாகத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பங்களிப்பு தொகையை வழங்கப்படுகிறது. காணிக்கைக்கான வரவு, செலவு கணக்கை பராமரிக்க தனி திட்டம் வகுக்க தயாராக இருப்பதாகவும்,” தெரிவிக்கப்பட்டது.
அப்போது, “அறநிலையத்துறை சார்பில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில், அதில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் அவர்கள் இஷ்டப்படி தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக,” குற்றம் சாட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் தங்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தீட்சிதர்கள் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அத்துடன் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்த நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதற்கான ஆவனங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் 1974 மற்றும் 1988 க்கு இடையில் 18.5 ஏக்கர் கோவில் நிலத்தை விற்றதாக மனிதவள & CE துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிலங்கள், தனிநபர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விற்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக அளவில் நிலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், தற்போது கோவிலுக்கு சொந்த 506.97 ஏக்கர் மட்டுமே சிறப்பு தாசில்தார் வசம் உள்ளது. தங்கள் விசாரணையில் தீட்சிதர்களிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருப்பதுட, தங்களின் மேல் விசாரணைகளுக்கு தீட்சிதர்கள் இடையூறாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.