ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோகம் வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதரசி பொதுவாக மார்கழி மாதங்களில் வருவது வழக்கம். ஆனால்,  இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சாமி திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு 21 நாட்கள் விழா நடைபெற்று வருகிறது. தற்போது பகல்பத்து, ராப்பத்து விழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

இதைடுத்து நாளை ஏகாதசியை முன்னிட்டு,   திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.. நாளை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பாடு செய்யப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசலை நம்பெருமாள் கடந்து செல்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நம்பெருமாள் புறப்பாட்டின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2,050 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாள். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு.