அகமதாபாத்:

கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள், நோய் குணமடைந்து வீடுகளுக்கு திரும்ப, அண்டை வீட்டார்கள், அந்த பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய் வெகு வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக நோயின் தீவிரம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. டெல்லி இமாம் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், அதன் தாக்கம் இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து  தாயகம் திரும்பியவர்கள், மற்றும் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. அவர்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் அவலம் நீடித்து வருகிறது. அண்டை வீட்டார்களோ அவர்களை சந்திக்கவோ, பேசவோ மறுத்து  அவர்களுக்கு மேலும் மன உளைச்சலை உருவாக்கி வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் சமூக விலகலை கடைபிடியுங்கள் என்றால், நமது மக்கள், கொரோவால் தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களையே சமூகத்தில் இருந்து ஒரேயடியாக தள்ளி வைக்கவே முயற்சி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து குஜராத் மாநிலம் சூரத் நகரைச் பிரபல மருத்துவர் சஞ்சீவாணி (Dr Sanjivani, Surat) அதிர்ச்சி தகவலை வெளியிட்டு, வேதனை தெரிவித்து உள்ளார்.

கொரோனா நோய் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவர்,

தனக்கு  நோய் குணமடைந்தாலும், மீண்டும் வீட்டுக்கு திரும்பக்கூடாது  அண்டைவீட்டார்கள் தன்னிடம் மிரட்டியதாகவும், வாய்மொழியகவே இந்த மிரட்டலை விடுத்தனர் என்று அச்சம் தெரிவித்ததாகவும், ஆனால், காவல்துறையினர்  அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்து இருப்பதாகவும், தன்னிடம் வருத்தத்துடன் பகிர்ந்தார் என்று கூறி உள்ளர்.

மேலும் கொரோனா நோய் காரணமாக மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களும் கடும் நெருக்கடி எழுந்துள்ளது என்றும் கூறி உள்ளார்.

பொதுமக்களின் இதுபோன்ற செயல்கள், நடத்தைகள், கொரோனா நோயாளிகளுக்கு மேலும் மன அழுத்தத்தையும், உளைச்சலையும் ஏற்படுத்தும் என்று வேதனை தெரிவித்துள்ள மருத்துவர், இதுதான் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களிடம் எழுந்துள்ள மனநிலை,,, இதுதான் உண்மையும்கூட என்று வருத்தம் தெரிவித்து உள்ளார்.