ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.

ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதன் உரிமையைக் கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளார் இயக்குநர் கண்ணன். ஆர்.கண்ணன் இயக்கி, தயாரிக்கவுள்ளார்.

நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், வசனகர்த்தவாக சவரிமுத்து மற்றும் ஜீவிதா சுரேஷ்குமார், எடிட்டராக லியோ ஜான் பால், கலை இயக்குநராக ராஜ்குமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் இன்று (மார்ச் 3) படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.