சென்னை; வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது  என சென்னையில் நடைபெற்ற  மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் (திஷா) முதல்வர் ஸ்டாலின்  கூறினார்.

சென்னை  தலைமை செயலகத்தில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (DISHA ஆய்வுக் கூட்டம்) முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  இன்று நடைபெற்றது. இன்று காலை முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,   பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,    தமிழ்நாட்டில் சுயஉதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் உரையாற்றியுள்ளார். வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 55.12 லட்சம் பேர் சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 17500 சிறப்பு சுயஉதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன; ரூ.25.81 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.