கோவை,

‘ஹேவிளம்பி’ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.1 கோடி ரூபாய் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டது.

இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கோவை அருகே உள்ள காட்டூர் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

புத்தாண்டு தினத்தில் பணம் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்மனை தரிசனம் செய்யும்போது, அனைத்தும் வளங்களும் கிடைக்கும் இந்துக்களின் நம்பிக்கை.

ரூபாய் அலங்காரத்தில், அதுவும் புத்தாண்டு தினத்தில் அம்மனை தரிசனம் செய்தது பக்தர்களுக்கு மன நிறைவை தருவதாக பக்தர்கள் கூறினர். இன்று  திரளான பொதுமக்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

மேலும், தமிழ் புத்தாண்டில் வறட்சி நீங்கி வளம் பெருகும் வகையில்,கோவிலின் முகப்பில் காய், கனிகளாலான கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே ஜனவரி 1ந்தேதியன்று கோவை மாகாளி அம்மனுக்கு இதுபோல் 5 லட்சம் ரூபாயில் 2 ரூபாய் புதிய நோட்டுக்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.