மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என பலதரப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆனந்த கிருஷ்ணன்.
இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் கடந்த நவம்பர் 28ம் தேதி மரணமடைந்தார்.
மலேசியாவில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது.
“ஏகே” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவில் மேக்சிஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 2005-ல் இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை 1 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.800 கோடி) வாங்கியதை அடுத்து வழக்குகளை சந்திக்க நேரிட்டது.
ஆனந்த கிருஷ்ணனின் மனைவி மோம்வஜராங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது மகன் வென் அஜான் சிரிபான்யோ உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர்.
புத்தமத கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிரிபான்யோ தனது தந்தையின் ரூ.40,000 கோடி சாம்ராஜ்யத்தை துறந்துவிட்டு புத்த துறவியாக மாறியது உலக அளவில் பரபரப்பு செய்தியானது.
சிரிபான்யோ, கடந்த 20 ஆண்டுகளாக தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் தாவோ டம் புத்த மடாலயத்தில் துறவியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.